Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
2017ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டம் தயாரிக்க முன்னர், மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் துறைசார் வர்க்கத்தினரின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் அடிப்படையில், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு சனிக்கிழமை (24) விஜயம் செய்தார்.
இவ்விஜயத்தின் போது, மீனவர்கள், சுற்றுலாத்துறை சார்ந்தவர்கள், சுயதொழில் முயற்சி மேற்கொள்வோர், விவசாய செய்கை மேற்கொள்வோர் உட்பட துறைசார்ந்த பலரும் தமது யோசனைகளை முன்வைத்ததுடன், அமைச்சரின் வருகைக்கு நன்றிகளையும் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ, மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார, அரசியல்வாதிகள் உட்பட அதிகாரிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago