Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2019 மார்ச் 18 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வளப்பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்திக்குமாறு, பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த வித்தியாலயதில் 272 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர் எனவும் 22 ஆசிரியர்கள் தேவைப்படுகுன்ற போதிலும் 14 ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
க.பொ.த உயர்தரத்துக்கு மாணவர்கள் இருந்தும், ஆசிரியர்கள் இல்லாததால், கல்வியைத் தொடர்வதற்காக கிண்ணியா, ஹொரவ்பொத்தான போன்ற பகுதிகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளதாகவும் பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
விஞ்ஞான ஆய்வு கூடம், நூலகம், கட்டட வசதிகள் போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாகவும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நான்கு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலய ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறைகளை நிவர்த்திப்பதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
34 minute ago
3 hours ago
3 hours ago