Gavitha / 2016 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை-ஜயபுர பகுதியில் 440மில்லிகிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை-சீனக்குடா வீதி இலக்கம் 880இல் வசித்து வரும் டி.வி.படபெதிகே உபுல் அனுறுத்த (42வயது) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜயபுர பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை (29) கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
29 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
45 minute ago
1 hours ago