Thipaan / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் 440 மில்லி கிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித தம்மிக, நேற்று (29) உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர், திருகோணமலை 04ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த தெனகம விதாரன படபெதிகே உபுல் அநுருத்த (42 வயது) எனவும் தெரியவந்துள்ளது.
தம்பலகாமம் பொலிஸ் பிரிவிக்குட்பட்ட ஜெயபுர பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுற்றி வளைத்த போதே, இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
15 minute ago
30 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago
46 minute ago
1 hours ago