Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 நவம்பர் 08 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது, அமைச்சர்களான மனோ கணேசன், மற்றும் ரிஷாட் பதியூதின் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது.
மன்னாரில் இன்று (08) நடைபெற்ற பிரசார கூட்டத்தின் போதே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரசார கூட்டத்தின் ஏற்பாடுகளை மேற்கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியூதினின் சகோதரர் ரிஷ்கான் பதியூதினுக்கும், அமைச்சர் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி/தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்திக்கும் இடையிலேயே முறுகல் ஏற்பட்டுள்ளது.
மன்னார் கூட்டம் தொடர்பில் பதாகைகள் அமைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது உள்ளிட்ட விடயங்களில் நேற்று (07) இரவு முதல் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் பிரசார மேடையில் ஜனகன் விநாயகமூர்த்தி அமர்வதற்கு இடம் ஒதுக்க ரிஷாட் அணியினர் மறுப்பு தெரிவித்தை அடுத்து, இரு அணிகளுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தமைக்கு, அமைச்சர் மனோ கணேசன் தனது உரையின்போது நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் அமைச்சர் ரிஷாட் பதியுதின் அணியினரை அதிருப்திக்கு உள்ளாக்கியதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஊடாக அறிய முடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago