Editorial / 2020 ஜூலை 20 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகேகொடை மேம்பாலத்தில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார்.
தனியார் பஸ் மற்றும் இராணுவ கெப் ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மேலும் இரண்டு இராணுவ சிப்பாய்கள் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நோக்கிய பயணித்த பஸ் ஒன்றை மற்றுமொரு பஸ் முந்திச்செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த கெப் வாகனத்துடன் மோதியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பனாகொடை இராணுவ முகாமைச் சேர்ந்த கெப் வாகனத்தில் சாரதியாக பணியாற்றி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
11 minute ago
15 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
19 minute ago