Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2022 பெப்ரவரி 03 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
ஈரானில் இருந்து கடல்வழியாக கப்பல் ஒன்றில் 200 கிலோகிராம் போதைப் பொருள் இலங்கைக்கு கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும், கொழும்பு கடற்படை தளத்திற்கு இன்று (03) வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்காவிலன் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் கடற்படையுடன் இணைந்து, சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஈரானில் இருந்து 200 கிலோகிராம் போதைப் பொருளை கடத்திவந்த கப்பலை, கடலில் வைத்தே வழிமறித்துள்ளனர். இதன்போது, சுமார் 200 கிலோகிராம் போதைப் பொருளை, கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி போட்டுள்ளனர். எனினும், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் தங்களுடைய பாவனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட கடத்தல் காரர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago