Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மார்ச் 26 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா, எம்.றொசாந்த்
யாழ் பல்கலைக்கழக மருதனார்மட நுண்கலைப் பீடத்தின் வரைதலும் வடிவமைத்தலும் மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை (26) வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
முகங்களில் பல்வேறு வரைபடங்களை வரைந்து கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருதனார்மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் கடந்த காலத்தில் சீராக நடைபெறவில்லை, ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீடத்தில் வரைதலும் வடிவமைத்தலும் துறைக்கு பரீட்சைகள் நடைபெறவில்லை, மற்றும் தமது துறைக்கான இணைப்பாளரை நியமனம் செய்யவில்லை போன்ற குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி இந்த அடையாள வகுப்பு பகிஸ்கரிப்பை நடத்தினர்.
கடந்த 16ஆம் திகதியும் இவர்கள் தமது கோரிக்கைகளை முன்னைத்து போராடியபோது, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கிய உறுதிமொழியை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.
2 வாரங்கள் ஆகியும் தங்களின் கோரிக்கைகள் எதுவும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி மாணவர்கள் மீண்டும் இன்று (வியாழக்கிழமை) போராட்டத்தை ஆரம்பித்தனர். எழுத்து மூலமான உறுதிப்பாடு தரும்வரையில் தங்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் என மாணவ பிரதிநிதிகள் கூறினர்.
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago