2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நீதிமன்றில்...

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பான குற்றப்பத்திரிகை, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (01) தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்தக் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 12பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வியும் மேல்மாகாண சபை உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு இன்று வருகைதந்தபோது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம். (படங்கள்: பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X