2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சிலுவைப்பாதை பவனி...

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,யோ.சேயோன்,வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பெரிய வெள்ளிக்கிழமையையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் சிலுவைபாதை பவனி இன்று (3) காலை நடைபெற்றது. மட்டக்களப்பு, நாவற்குடா, சின்னலூர்;த்து ஆலயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா பாடசாலை மைதானத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்த சிலுவை பாதை பவனி நாவற்குடா, சின்னலூர்;த்து ஆலய முன்றலில் முடிவடைந்தது.

இதன்போது திருப்பலி கொடுக்கப்பட்டதுடன் திருப்பலி பிராத்தனையை நாவற்குடா சின்னலூர்த்து ஆலயத்தின் பங்குத்தந்தை கே.இக்னேசியஸ் நடத்தினார். இதில் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் ஏ.ஜுலியன் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை. மட்டக்களப்பின் கிறிஸ்தவ பேராலயமான மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் ஆலயத்தின் திருச்சிலுவை பாதை நிகழ்வு கோவிந்தன் வீதி மற்றும் கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதி, மட்டக்களப்பு பஸ் நிலையம் ஊடாக சென்றல் வீதியை அடைந்து பின்னர் ஆலயத்தினை வந்தடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X