2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

திறந்து வைப்பு...

Princiya Dixci   / 2015 ஜூலை 06 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தின் புதிய கட்டிட தொகுதி, இன்று திங்கட்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

பழைய பூங்கா வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நான்கு மாடி கட்டிடத்தொகுதியினை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .