2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சத்தியாகிரக போராட்டம்...

Sudharshini   / 2015 ஜூலை 08 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளனம் வழங்ககோரியும் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுப்பேன் என்ற தொழிற்சங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் தலவாக்கலை விளையாட்டு மைதானத்தில் இன்று (08) சத்தியாகிர போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் ஆகியோர் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஹட்டன், நோட்டன், மஸ்கொலியா, பொகவந்தலா ஆகிய பல பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த சத்தியாகிரக போராட்டத்தில்; மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ராஜாராம் சோ.சிரிதரன் மலையக மக்கள் முன்னனியின் செயலாளர் லோரன்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .