2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

21ஆவது திருத்தம்: இன்று முக்கிய கலந்துரையாடல்

Freelancer   / 2022 ஜூன் 03 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான இந்த சந்திப்பு பிற்பகல் 3.30க்கு பிரதமர் காரியாலயத்தில்  இடம்பெறவுள்ளது. 

இதேவேளை அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் முதற்கட்டமாக கடந்த மாதம் 27 ஆம் திகதி கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு  தரப்பினர் முன்வைத்த முன்மொழிவுகளை பரிசீலித்து இன்றைய கலந்துரையாடலில்  இறுதி தீர்மானம்  எடுக்கப்படும்  எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X