2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அட்டுலுகம சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட இடம்

Freelancer   / 2022 மே 29 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த (27)  ஆம் திகதி காணாமல்போய், நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை  சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே, காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 தனது வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள கடையொன்றில் கோழி இறைச்சி வாங்கச் சென்ற போதே சிறுமி காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சிறுமியை தேடும் நடவடிக்கைகள், பொலிஸ் ​மோப்பநாய்க் கொண்டு முன்னெடுக்கப்பட்டன.

அச்சிறுமியின் சடலம், சேற்றுக்குள் இருந்தே, நேற்று (28) மாலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .