Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2022 நவம்பர் 02 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சின்ன ரோம் என்றழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் அதிக எண்ணிக்கையான கத்தோலிக்க மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு வாழும் கத்தோலிக்க மக்கள் ஆத்மாக்கள் தினமான இன்று (02) இறந்த தமது உறவினர்களின் கல்லறைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல், உறவினர்கள், நண்பர்கள் கல்லறைகளுக்கு வந்து இறந்தவர்களை நினைவு கூர்ந்து வழிபாடு நடத்தினர்.
பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், மலர் கொத்துக்கள் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்தனர்.
நீர்கொழும்பு மஞ்சொக்காஹேன பொது மயானம் மற்றும் கடற்கரை தெரு றோமன் கத்தோலிக்க மயானத்தில் நடைபெற்ற இறைவணக்க நிகழ்வுகளில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். ( எம்.இஸட். ஷாஜஹான்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025