Editorial / 2023 ஜனவரி 06 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி, வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினமும் (வெள்ளிக்கிழமை-06) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் 8 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டமானது யாழ்ப்பாணத்தில் நாவற்குழி சந்திக்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

"ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நேற்றைய தினம் வியாழக்கிழமை (05) ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முன்னெடுக்கப்படவுள்ளது. (நிதர்ஷன் வினோத்)




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .