Editorial / 2026 மார்ச் 20 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பொது மைதானத்தில் இன்று (20) ஈகைத் திருநாள் (நோன்புப் பெருநாள்) தொழுகை மிகவும் எழுச்சியுடனும் ஆன்மீக உன்னதத்துடனும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெருமளவிலான இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டு, பெருநாளை முன்னிட்டு ஒற்றுமை, சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தொழுகையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இடம்பெற்ற பெருநாள் உரையில், சமூக நல்லிணக்கத்தையும் மனிதநேயப் பண்புகளையும் பேணிக் காக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில், நாட்டின் அமைதி, அபிவிருத்தி மற்றும் அனைத்து மக்களினதும் நலனுக்காகச் சிறப்பு துஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
நூருல் ஹுதா உமர்




காத்தான்குடி கடற்கரையில்
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் இன்றைய தினம் ஈகைத் திருநாளை (நோன்புப் பெருநாள்) கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (20.03.2026) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் காத்தான்குடி கடற்கரையில், சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது.
இப்பெருநாள் தொழுகையையும், அதனைத் தொடர்ந்த விசேட உரையான குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) அவர்கள் நடாத்தினார்.
இத்திடல் தொழுகையில் பெருமளவிலான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு தமது மார்க்கக் கடமையை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
நூருல் ஹுதா உமர்









12 minute ago
51 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
51 minute ago
56 minute ago