Editorial / 2026 ஏப்ரல் 15 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு அமைவாக, 2026ஆம் ஆண்டுக்கான அரச எண்ணெய் தேய்க்கும் விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (15) காலை கண்டியில் நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் ஸ்ரீ மகா நாத தேவாலய வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மகா விகாரவங்சிக சியாமோபாலி மகா பீடத்தின் மல்வத்து மற்றும் அஸ்கிரி ஆகிய இரு பிரிவுகளின் மகா நாயக்க தேரர்களின் வழிகாட்டலுடன், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.
ஆசீர்வாத வழிபாடுகள்: இன்று காலை ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, புத்தாண்டுக்காக ஆசீர்வாதம் பெற்ற பின்னர் எண்ணெய் தேய்க்கும் அரச விழாவில் கலந்துகொண்டார்.
காலை 6:55 மணிக்கு எட்டப்பட்ட சுப நேரத்தில், அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்க தேரர் அதிவணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் அவர்கள், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு சம்பிரதாய முறைப்படி எண்ணெய் தேய்த்து வைத்தார். இதன்போது மகா சங்கத்தினர் 'செத் பிரித்' பாராயணம் செய்து ஜனாதிபதி உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
மக்களுடன் கலந்துரையாடல்: எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்திற்காகத் தலதா மாளிகை வளாகத்திற்கு வருகை தந்திருந்த மக்களிடையே சென்ற ஜனாதிபதி, அவர்களின் நலன்களைக் கேட்டறிந்ததுடன் சுமுகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அங்கிருந்த பொதுமக்கள் ஜனாதிபதிக்குத் தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள்: இந்நிகழ்வில் மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர்களான கலாநிதி நியங்கொட விஜிதசிறி தேரர், திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க தேரர்களான வெண்டருவே உபாலி தேரர், நாரம்பனாவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
மேலும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, புத்தசாசன மற்றும் சமய விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.



4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago