2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

திருச்சிலுவை மகா வித்தியாலயத்தில் ஒளி விழா

Mayu   / 2024 நவம்பர் 25 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலய வருடாந்த  ஒளி விழா பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி சிறியபுஸ்பம் தலைமையில் சனிக்கிழமை (23) சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா, சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் செபமாலை மகேந்திரகுமார், பங்குத்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் வலயக்கல்வி அலுவலகர்களான டிலுக்சன், அருட்சகோதரி பவித்ரா, வீரச்சோலை பாடசாலை அதிபர் சுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், கல்வியல் கல்லூரிக்கு தெரிவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கி வைத்தனர்.

வி.ரி.சகாதேவராஜா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X