Editorial / 2022 ஏப்ரல் 06 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ராஜபக்ஷர்களின் ஆட்சி வேண்டாம்; மக்கள் ஆட்சியே வேண்டுமென வலியுறுத்தி, மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால் இன்று (06) அணிதிரண்ட பெண்கள், அரசுக்கு எதிராக அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட பெண்கள் நிறுவன வலையமைப்பும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண் உறுப்பினர்கள் ஒன்றியமும் இணைந்து இந்த ஆர்பாட்டத்துக்கான அழைப்பை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து காந்திபூங்காவிற்கு முன்னால் நேற்றுக் காலை 9 மணிக்கு ஒன்றுதிரண்ட நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள், “அரிசி, பால்மா, மின்சாரம் பெற்றோல், மருந்து மற்றும் பசளை இல்லை”, “கோட்டா போ, நாட்டை தா” மற்றும் “ஊழல் நிறைந்த ஆட்சி இன்றுடன் முடியட்டும்” எனக் கோஷமிட்டனர்.
(படங்கள் - கனகராசா சரவணன்)



7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago