2025 மே 15, வியாழக்கிழமை

முடங்கியது அம்பாறை; வீதிகள் வெறிச்சோடின

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.ரி.சகாதேவராஜா

கொரோனாத் தொற்றுப்  பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.  

அந்தவகையில் அம்பாறை மாவட்டமும் முடங்கியுள்ளதோடு, பிரதான வீதிகள் அனைத்தும் வெறிச்சோடியுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளது.

எனினும் பாமசி மற்றும் சத்தோச நிலையங்கள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவை நிலையங்கள் மாத்திரம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் வீதிச்சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ள நிலையில் வெளியில் நடமாடுகின்றவர்களை பரிசோதனைக்குட்படுத்தி வருவதோடு, உரிய காரணமின்றி நடமாடுகின்றவர்களை எச்சரிக்கை செய்து வீடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .