Editorial / 2022 மே 16 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாவது நாளான இன்று (16) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களின் நினைவாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பகுதியில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காச்சி வழங்கப்படுகின்றது.
உடையார்கட்டு பொது சந்தை முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கஞ்சிவழங்கும் நிழக்வு நடைபெற்றுள்ளது.
இறுதிப்போரின் போது மக்களுக்கு கஞ்சிகாச்சி வழங்கிய தாயார் ஒருவர், இன்றையதினம் கஞ்சி காச்சி மக்களுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியிலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று (16) ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது
இதன்போது முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் (படங்களும் தகவலும் சண்முகம் தவசீலன் செ.கீதாஞ்சன்)






2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026