Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
யா/ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி, வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் முன்ணணிப் பாடசாலையாகத் திகழ்வதோடு தனக்கே உரிய கல்விப் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றது.
இக் கல்லூரியின் பௌதீக வளத் தேவைகள் அரசதுறையால் மட்டுமன்றி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளால்; சிறப்பாக நிறைவேற்றப்பட்டு ஒரு நிறைவான கல்லூரியாக மிளிர்கின்றது
நகர்ப்புற பாடசாலைகளுக்கு ஈடிணையாக இக் கல்லூரியிலும் நவீன கற்றல் சாதனைச் செயற்பாடாக ஒரே தடவையில் ஒன்பது திறன் வகுப்பறைகள் (Smart class rooms) பழைய மாணவர்களால் அமைக்கப்பட்டமை கல்வி சாதனையாகவும் அமைகின்றது
இந்த திறன் வகுப்பறைகள் பழைய மாணவர்களோடு இரட்ணம் நிதியம் (Ratnam Foundation) இலண்டன் அமைப்பினரின் ஸ்தாபகர் Dr.நித்தியானந்தவின் பங்களிப்போடு சிறப்பாக அமைக்கப்பெற்று கடந்த செப்ரெம்பர் 06ம் நாள் உரிய வகையில் கையளிக்கப்பட்டமை பாடசாலை வரலாற்றுச் சாதனைகளில் ஒன்றெனலாம்.
பாடசாலை முதல்வர் சி.திரிகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ரா.வரதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததோடு வடமாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர் செ.உதயகுமார், யாழ்.கல்வி வலய கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன், கோட்டக் கல்வி அலுவலர் நா.சிவநேசன், தென்மராட்சி வலய ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் எஸ்.கிருஷ்ணகுமார், சிவசக்தி மணிமண்டப நிறுவுநர். திரு.வே.சிவசுந்தரம், ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி ஓய்வுநிலை அதிபர் திரு.வ.ஆறுமுகம், ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி அறக்கொடை நிதிய வாழ்நாள் உறுப்பினர் திரு.த.விஸ்வலிங்கம், கல்லூரியின் ஓய்வுநிலை பிரதிஅதிபர் செல்வி.வ.சிவலீலாதேவி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இச்செயற்பாடுகள் கல்லூரி அதிபர்.சி.திரிகரன் தலைமையில் பாடசாலைச் சமூகத்தினர் அனைவரினதும் ஒன்றிணைந்த கூட்டு முயற்சியாகும்.
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago