2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யானைகளை விரட்டும் சிறுவர்கள்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச கரைவாகு வயல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டு  யானைகளின் நடாமாட்டம் அதிகரித்து காணப்படுவதுடன்,  யானைகளை விரட்டும் முயற்சியில் சிறுவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்குறித்த பிரதேச  வயல் வெளி பகுதியில்  தொடர்ச்சியாக கடந்த சில நாள்களாக   காட்டு யானைகள் 10 முதல் 20 வரை வருகை தந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறு வருகை தரும் காட்டு யானைகள் அருகில் உள்ள   மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உள்நுழைவதுடன், அவ் யானைகளை சிறுவர்கள் விரட்டும்  நடவடிக்கையில்  ஈடுபட்டதை காண முடிந்தது.

குறிப்பாக கல்முனை மாநகர எல்லை பிரிவில் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கல்முனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கீறின் பில்ட்  தொடர்மாடி குடியிருப்பு பகுதி மற்றும் சாய்ந்தமருது பிரதேசத் தில் அமைக்கப்பட்ட பொலிவேறியன் குடியிருப்பு வீட்டு திட்ட பகுதியை அண்மித்த வயல் வெளியில்  காட்டு யானைகளின் வருகை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது  தொடர்பில் பொறுப்புவாய்ந்தவர்கள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(படங்கள் - பாறுக் ஷிஹான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X