Editorial / 2023 பெப்ரவரி 03 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏழு குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சி.விகிர்தன் தெரிவித்தார்.
வியாழக்கிழமை இரவு பெய்த கடும் மழை காரணமாக முத்தையன்கட்டுக்குளம், தண்ணிமுறிப்புக்குளம் என்பன வான் பாயத் தொடங்கிய நிலையில் இரு குளங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவில் கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், பழையமுறிகண்டிக்குளம், தேறாங்கண்டல்குளம், ஐயன்கன்குளம் ஆகிய குளங்களும் வான் பாய்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். நடராசா கிருஸ்ணகுமார்
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago