Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2022 ஜனவரி 21 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டம் இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹைபொரஸ்ட் பிரதேசத்தில் புதிய பொலிஸ் நிலையம் உத்தியோகப்பூர்வமாக இன்று (21) காலை சுப வேளையில் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக நாட்டில் புதிய பொலிஸ் நிலையங்களை நிறுவும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த பொலிஸ் நிலையம் ஹைபொரஸ்ட் பிரதேச மக்களின் நலன்கருதி திறந்து வைக்கப்பட்டது.
பொலிஸ்மா அதிபர் டி.ஜி.விக்கிரமரத்னவின் ஆலோசனைக்கு அமைய நுவரெலியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி.யூ.உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் மத்திய மாகாண பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் வழிகாட்டலின் கீழ், மத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன புதிய பொலிஸ் நிலையத்தை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.
ஹைபொரஸ்ட் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பொலிஸ் நிலையம் ஆறு கிராமசேவகர் பிரிவினை உள்வாங்கி ஹைபொரஸ்ட் -கோணப்பிட்டிய பிரதான வீதிக்கு அருகில் ஹைபொரஸ்ட் முதலாம் பிரிவு தோட்டத்தில் 1928 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடம் ஒன்றை புதுப்பித்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஹைபொரஸ்ட் இலக்கம் ஒன்று முதல் மூன்று வரையான தோட்டப்பகுதிகள், குருந்துஓயா ,பிங்கந்தலாவை,கோனக்கலை,மெரி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago