2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

ஆசிய விளையாட்டுப் போட்டி: 10ஆம் நாள் பதக்கப்பட்டியல்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 30 , மு.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பத்தாம் நாளான நேற்று சீனா தங்க பதக்கங்களில் சதத்தையும், மொத்த பதக்கங்களில் இரட்டைச் சதத்தையும் பெற்றுள்ளது. 238 பதக்கங்களை பெற்று  தொடர்ந்தும் சீனா முதலிடத்திலுள்ளது. இரண்டாம், மூன்றாமிடங்களை போட்டிகளை நடாத்தும் தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. இந்தியா மேலும் இரு தங்கப் பதக்கங்களைப்   பெற்று ஒன்பதாமிடத்தை தக்க வைத்துள்ளது. ஈரான் சிறப்பான பெறுதிகளைக் காட்டி ஐந்தாமிடத்திற்கு முன்னோக்கி வந்துள்ளது. தாய்லாந்து 10 வது இடத்தை கைப்பற்றியுள்ளது. முதல் 10 இடங்களிற்குள் இருந்த நாடுகள் சில வீழ்ச்சியடைந்துள்ளன. 
 
சீனா 112 தங்கப்பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 72 வெள்ளிப் பதக்கங்களையும் 54 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று, மொத்தம்க 238 பதக்கங்களைப் பெற்றுள்ளது. தென் கொரியா  44 தங்கம், 50 வெள்ளி, 52 வெண்கலம் அடங்கலாக 146 பதக்கங்களைப் பெற்றுள்ளது. 35 தங்கம், 47 வெள்ளி, 50 வெண்கலம் அடங்கலாக 132 பதக்கங்களை பெற்று ஜப்பான் மூன்றமிடத்தை பெற்றுள்ளது. கசகஸ்தான் 15 தங்கப்பதக்கங்கள், 16 வெள்ளிப்பதக்கங்கள், 22 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 53 பதக்கங்களுடன் நான்கமிடத்தையும், 10 தங்கப்பதக்கங்கள்,11 வெள்ளிப்பதக்கங்கள், 8 வெண்கலப்பதக்கங்கள்  அடங்கலாக  29 பதக்கங்களுடன் ஈரான் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளன. தொடர்ந்து வரும் இடங்களை வட கொரியா , கட்டார் சைனிஸ் தாய்பேய், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் பெற்றுள்ளன. இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 29 வெண்கலம் அடங்கலாக 42 பதக்கங்களைப்  பெற்றுள்ளது.
 
இலங்கைக்கு ஒரு வெண்கலப் பதக்கம் மாத்திரம் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் கிடைத்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .