2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

கிங்ஸ் 11 பஞ்சாப்பின் ஆதிக்கம் தொடர்கின்றது

A.P.Mathan   / 2014 மே 15 , மு.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கிங்க்ஸ் 11 பஞ்சாப் அணிக்கும், ஹைதராபாத் சன்ரைசேர்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 6 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பாடிய ஹைதராபாத் சன்ரைசேர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது. இதில் நாமன் ஓஜா 36 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள், 7 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களையும், ஷிகார் தவான் 45 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 44 ஓட்டங்களையும் பெற்றனர். 
 
பந்துவீச்சில் ரிஷி தவான் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பாடிய கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் அனைத்து துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாக செயற்ப்பட்டதன் காரணமாக இலகுவாக வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் ரிதிமன் சஹா 26 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 54 ஓட்டங்களையும், மனன் வொஹ்ரா 20 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 47 ஓட்டங்களையும், கிளன் மக்ஸ்வெல் 22 பந்துகளில் 43 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லி ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்றனர். 
 
போட்டியின் நாயகனாக  ரிதிமன் சஹா தெரிவானார். 
 
 
இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளைப் பெற்று 16 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஹைதராபாத் சன்ரைசேர்ஸ் அணி 10 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .