2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

உலக 20-20 அணி அறிவிப்பு: இலங்கை சார்பாக ஒரு வீரர் மாத்திரமே

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக 20-20 கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததையடுத்து சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் உலக 20-20 கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி சார்பாக லசித் மாலிங்க மாத்திரமே இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தியா அணி சார்பாக 4 வீரர்களும், தென் ஆபிரிக்க அணி சார்பாக 2 வீரர்களும், மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக 3 வீரர்களும், அவுஸ்திரேலியா அணி சார்பாக ஒரு வீரரும், நெதர்லான்ட்ஸ் அணி சார்பாக ஒரு வீரரும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணிக்கு தலைவராக இந்திய அணித்தலைவர் டோனி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அணியை போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன், நசிர் ஹுசைன், வசீம் அக்ரம் ஆகியோர் தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. புள்ளி விபரங்கள் தெரிவில் கணக்கெடுக்கப்பட்ட போதும் அவை முழுமை ஆதிக்கம் செலுத்தவில்லை என தெரிவுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

துடுப்பாட்ட ஒழுங்கில் அணி விபரம் 
ரோஹித் ஷர்மா (200 ஓட்டங்கள்), ஸ்டீபன் மைபே (224 ஓட்டங்கள்), விராத் கோலி (319 ஓட்டங்கள்), கிளன் மக்ஸ்வெல் (147ஓட்டங்கள்), டோனி (50 ஓட்டங்கள், 6 ஆட்டமிழப்புக்கள் - விக்கெட் காப்பாளர்/தலைவர்), டரின் சமி (101 ஓட்டங்கள்), ரவிச்சந்திரன் அஷ்வின் (11 விக்கெட்கள்), டேல் ஸ்டைன் (09 விக்கெட்கள்), சாமுவேல் பத்ரி (11 விக்கெட்கள்), லசித் மாலிங்க (05 விக்கெட்கள்), க்ரிஷ்மர் சன்டொகி (12ஆவது வீரர் -08 விக்கெட்கள்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .