2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

பாகிஸ்தான் 20-20 தலைவர் பதவியில் இருந்து ஹபீஸ் விலகல்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 20-20  தலைவர் பதவியில் இருந்து மொஹமட் ஹபீஸ் விலகியுள்ளார். நேற்றைய தினம் ஊடகங்கள் மூலம் இந்த தகவலை அவர் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரை சந்தித்து உரையாடிய பின்னரே தான், தானாக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். உலக 20-20 தொடரில் குழு நிலைப் போட்டிகளுடன் பாகிஸ்தான் அணி  வெளியேறியதையடுத்து, அணியை வெற்றி பாதையில் எடுத்து செல்ல முடியாமைக்கு முழு பொறுப்பையும் தான் எடுத்த தலைவர் பதவியில் இருந்து விலகுவாதாக தெரிவித்துள்ளார்.

விளையாடியதோ நல்லதோ, கெட்டதோ முடிவை வழங்கவேண்டும். அது நடைபெறவில்லை. எனவே பதவி விலகுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதுவரை நடைபெற்ற உலக 20-20 தொடர்களில் பாகிஸ்தான் அணி அரை இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இதுவே முதற் தடவையாகும். மொஹம்மட் ஹபீஸ் 29 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். 18 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அதேவேளை, 11 தோல்விகளை பெற்றுள்ளார். தனது ஒருநாள் சர்வதேச போட்டி உபதலைவர் பதவியில் இருந்தும் ஹபீஸ் விலகியுள்ளார். தான் எந்த அழுத்தங்களுமின்றி இந்த முடிவை எடுத்ததாகவும் எந்த தலைவருக்கு கீழ் விளையாடவும் தயார் எனவும் ஹபீஸ் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .