2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

நட்டஈடாக 4 கோடி அமெரிக்க டொலர்களை கோரியுள்ள இந்தியா

Thipaan   / 2014 நவம்பர் 01 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்று கொண்டு இருந்த கிரிக்கெட் தொடரை, இடை நடுவே நிறுத்தியமைக்கு நட்ட ஈடாக கிட்டத்தட்ட 4 கோடி அமெரிக்க டொலர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மேற்கிந்திய கிரிக்கெட் சபையிடம் கோரியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கான சகல  கிரிக்கெட் தொடர்களையும்  இந்தியா   இரத்து செய்துள்ள நிலையில், இந்த நட்ட ஈட்டு அறிவித்தலை இன்று(01) வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே நிர்வாக சபைக் கூட்டத்தில் இந்த விடயம் பேசப்பட்டு இருந்த நிலையில், இன்று உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்றில் இருந்து 15 நாட்களுக்குள் மேற்கிந்திய தீவுகள் பதிலளிக்கவில்லை எனின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேற்கிந்திய கிரிக்கெட் சபை தலைவருக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் சஞ்சய் பட்டேல், 4 பக்கம் கொண்ட கடிதத்தை அனுப்பி நேற்று(31) வைத்துள்ளார்.

இந்தக் கடிதத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாகவும், இழந்த நன் மதிப்புக்கள், நற்பெயர் என்பன தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபையின் இழப்பீட்டு விபரம்

ஒளிபரப்பு – 2,160 மில்லியன் இந்திய ரூபாய்
பிரதான அனுசரணை - 100.1 மில்லியன் இந்திய ரூபாய்
அணி அனுசரணை - 96 மில்லியன் இந்திய ரூபாய்
ஆடை அனுசரணை - 30.5 மில்லியன் இந்திய ரூபாய்
டிக்கெட் அனுசரணை - 125 மில்லியன் இந்திய ரூபாய்
மைதான அனுசரணை - 75 மில்லியன் இந்திய ரூபாய்



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .