2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

பஞ்சாப் அணிக்கு 4வது தொடர்ச்சியான வெற்றி

Super User   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிங்ஸ் 11 பஞ்சாப் அணி கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணியை 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இந்த வருட ஐ.பி.எல் தொடரின் தொடர்ச்சியான நான்காவது வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து  132 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் விரேந்தர் செவாக் 37(30 பந்துகள், 4 ஓட்டங்கள் 3, 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும், ரிஷி தவான் ஆட்டமிழக்காமல்  19(18 பந்துகள், 4 ஓட்டங்கள் 2) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பியுஷ் சவ்லா, சுனில் நரைன் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சூரியகுமார் யாதவ்34 (17 பந்துகள், 4 ஓட்டங்கள் 3, 6 ஓட்டங்கள் 1) ஓட்டங்களையும், ரொபின் ஊத்தப்பா 19(27 பந்துகள், 4 ஓட்டங்கள் 3) ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சந்தீப் ஷர்மா 3 விக்கெட்களையும், மிச்சல் ஜோன்சன், அக்சார் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சந்தீப் ஷர்மா போட்டியின் நாயகனாக தெரிவு செயப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் நான்கு வெற்றிகளைப் பெற்று கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .