Shanmugan Murugavel / 2017 ஜனவரி 01 , மு.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு இன்னும் விளையாடப்போவதாகத் தெரிவித்துள்ள உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான ரொஜர் பெடரர், தனது டென்னிஸ் எதிர்காலத்தை கருத்திற் கொள்கையில், தனது மனநிலையானது நீண்டகாலத்தை நோக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற விம்பிள்டன் தொடரின்போது சத்திரசிகிச்சை செய்யப்பட்ட இடதுமுழங்காலில் மீண்டும் காயமடைந்தமை முதல், போட்டிகளில் பங்கேற்றிருக்காத 17 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ள பெடரர், அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெறும் ஹொப்மான் கிண்ண அணிப் போட்டியில், தனது மீள்வருகையை நிகழ்த்துகிறார்.
இந்நிலையிலேயே, தனது மீள்வருகையின்போது எவ்வாறு திறமையை வெளிப்படுத்துவேன் என்பதில் உறுதியாயில்லாதபோதும், தான் நினைத்துள்ள நடைமுறைகளில் ஓய்வு இல்லையென, 35 வயதான பெடரர் தெரிவித்துள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago