Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலண்டனில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவின் யோகேஷ்வர் தட்டுக்கு, வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. இரண்டாமிடம் பெற்ற ரஷ்யரின் பதக்கம் பறிக்கப்பட்டமையடுத்தே, யோகேஷ்வருக்கு இப்பதக்கம் கிடைத்துள்ளது.
மல்யுத்தப் போட்டிகளில் ரஷ்யாவின் பெஸிக் குடுகோவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருந்தது. யோகேஷ்வருக்கு வெண்கலமே கிடைத்திருந்தது. ஆனால், 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்துச் சோதனைகளுக்காக வழங்கப்பட்ட மாதிரிகள் மீளச் சோதிக்கப்பட்டதில், பெஸிக் குடுகோவ், ஊக்கமருந்தைப் பயன்படுத்தியிருந்தமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவரது பதக்கம் பறிக்கப்பட்டு, யோகேஷ்வருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 4ஆம் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்காவின் கெலெமான் ஸ்கொட், வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்கதாக, ஊக்கமருந்துச் சோதனையில் சிக்கியுள்ள பெஸிக் குடுகோவ், 2013ஆம் ஆண்டு கார் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago