Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டி, இன்று இடம்பெறவுள்ளது. டெல்லியில் இடம்பெறவுள்ள இப்போட்டி, பிற்பகல் 1:30க்கு ஆரம்பிக்கவுள்ளது.
இத்தொடரின் முதலாவது போட்டியில், இந்திய அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில், பதிலடியொன்றை வழங்குவதற்கான எதிர்பார்ப்புடன், நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. நியூசிலாந்தின் முன்னிலைத் துடுப்பாட்ட வீரர்கள், முதலாவது போட்டியில் சறுக்கியிருந்த நிலையில், இப்போட்டியில் அதைச் சரிசெய்வதற்கு, அவ்வணி எதிர்பார்த்துள்ளது. மறுபக்கமாக, முதலாவது போட்டியில் மிகச்சிறப்பாகப் பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், இப்போட்டியிலும் அதைத் தொடருவதற்கு எதிர்பார்த்துள்ளனர்.
இத்தொடரின் முதல் 3 போட்டிகளுக்குமான குழாமில் சேர்க்கப்பட்டிருந்த அவ்வணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா, இன்றைய போட்டியிலும் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்படுகிறது. அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல், இன்னமும் குணமடையாத காரணத்தாலேயே, அவரால் இப்போட்டியில் பங்குபற்ற முடியாது என, மருத்துவக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னாவுக்குப் பதிலாக, மாற்று வீரர் எவரும் அறிவிக்கப்படவில்லை.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago