2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

3ஆவது போட்டியில் பார்த்திவ் பட்டேல்

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 23 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவது போட்டியில், இந்திய அணியின் விக்கெட் காப்பாளராகச் செயற்பட, பார்த்திவ் பட்டேல் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் முதற்தெரிவு விக்கெட் காப்பாளரான ரிதிமான் சகாவின் இடது கால் தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக, மூன்றாவது போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்ற முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்தே, பார்த்திவ் பட்டேலுக்கு இவ்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு, தனது 17 ஆண்டுகள் 153 நாட்கள் நிறைவில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்ட பார்த்திவ் பட்டேல், டெஸ்ட் போட்டிகளில் மிகவும் இளையவர் என்ற சாதனையைப் படைத்தார். இறுதியாக அவர், 2008ஆம் ஆண்டே, டெஸ்ட் போட்டியொன்றில் விளையாடியிருந்தார். தற்போது 8 ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கௌதம் கம்பீர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

3ஆவது போட்டிக்கான குழாம்:
விராத் கோலி, அஜின்கியா ரஹானே, கே.எல்.ராகுல், முரளி விஜய், செற்றேஸ்வர் புஜாரா, கருண் நாயர், பார்த்திவ் பட்டேல், இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, ஜயந்த் யாதவ், அமித் மிஷ்ரா, மொஹமட் ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ஹார்டிக் பாண்டியா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .