2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

2ஆவது போட்டியிலும் மே.தீவுகளை வென்றது பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டியில், துடுப்பாட்ட வீரர்களின் சிறப்பான பங்களிப்புடன், பாகிஸ்தான் அணிக்கு வெற்றி கிடைத்தது.

ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 337 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் தனது 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி சதத்தைப் பெற்ற பாபர் அஸாம், 126 பந்துகளில் 123 ஓட்டங்களைப் பெற்றார். தவிர ஷொய்ப் மலிக் 90 (84), சப்ராஸ் அஹ்மட் ஆட்டமிழக்காமல் 60 (47) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜேஸன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசெப் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

338 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 278 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 59 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் டெரன் பிராவோ 61 (74), மார்லன் சாமுவேல்ஸ் 57 (52), கேர்க் பிறெத்வெய்ட் 39 (66), டினேஷ் ராம்டின் 34 (29), ஜேஸன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் 31 (30) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் வஹாப் றியாஸ், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக, பாபர் அஸாம் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .