Shanmugan Murugavel / 2016 செப்டெம்பர் 25 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியிலும், பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று, 2-0 என்ற முறியடிக்கப்பட முடியாத முன்னிலையைத் தொடரில் பெற்றுள்ளது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, 8.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகறைள இழந்து 58 ஓட்டங்களுடன் தடுமாறிய போதிலும், முதலில் ஷொய்ப் மலிக், பின்னர் சப்ராஸ் அஹமட் ஆகியோர் வெளிப்படுத்திய சிறப்பான துடுப்பாட்டத்தால், ஓரளவு போட்டித்தன்மையான நிலையை அடைந்தது. துடுப்பாட்டத்தில் சப்ராஹ் அஹமட் ஆட்டமிழக்காமல் 46 (32), காலிட் லத்தீப் 40 (36), ஷொய்ப் மலிக் 37 (28) ஓட்டங்களைப் பெற்றனர்.
161 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது. ஒரு கட்டத்தில் 18.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 119 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி, இறுதி நேரத்தில் சுனில் நரைன் வெளிப்படுத்திய அதிரடியின் காரணமாக, போராடியிருந்தது. துடுப்பாட்டத்தில் சுனில் நரைன் 30 (17), அன்ட்ரே பிளற்சர் 29 (37) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சொஹைல் தன்வீர், 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஹஸன் அலி 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக சொஹைன் தன்வீர் தெரிவானார்.
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026