Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கொல்கத்தாவில் நேற்று ஆரம்பமான இரண்டாவது போட்டியில், இன்றைய இரண்டாம் நாள் முடிவில், தனது முதலாவது இனிங்ஸில் ஆடி வரும் நியூசிலாந்து அணி, 128 ஓட்டங்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தற்போது களத்தில், பி.ஜெ.வட்லிங் 12, ஜீதன் பட்டேல் ஐந்து ஓட்டங்களுடன் உள்ளனர். முன்னதாக, அணித்தலைவர் றோஸ் டெய்லர் 36, லுக் றோங்கி 35 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முன்னதாக, தமது முதலாவது இனிங்ஸில், இந்திய அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 316 ஓட்டங்களைப் பெற்றது. செட்டேஸ்வர் புஜாரா 87, அஜிங்கியா ரகானே 77, ரித்திமான் சகா ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மற் ஹென்றி மூன்று, ட்ரெண்ட் போல்ட், நீல் வக்னர், ஜீதன் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago