Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் பாபர் அஸாம், இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் விராத் கோலி, இளையவராக இருந்ததை ஞாபகமூட்டுவதாக, பாகிஸ்தானின் பயிற்றுநர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
தற்போது 22 வயதான பாபர் அஸாம், இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளிலும் 18 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் மாத்திரமே விளையாடியுள்ளார். இதில், நியூசிலாந்துக்கெதிராக ஹமில்டனில் இடம்பெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில், தனித்து நின்று போராடி, ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
"அவர் (அஸாம்), துடிப்பான இளைய வீரர். அவர் எதிர்காலத்தில், மிகச்சிறந்த வீரராக இருப்பார்.அதே வயதில், விராத் கோலி இருந்ததைப் போன்று அவர் உள்ளார் என்று நான் சொல்வேன். அது, உயர்வான பாராட்டு என்பதை நானறிவேன், ஆனால் அவர் அதற்குப் பொருத்தமானவர்" என்றார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago