2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

'தலைவராக 2018 வரை தொடர்க'

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 29 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக, ஆகக்குறைந்தது 2018ஆம் ஆண்டு வரையாவது தொடர வேண்டுமென, மிஸ்பா உல் ஹக்கிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரியுள்ளது.

"தனது எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுப்பதற்கு, மிஸ்பாவுக்கு உரிமையுள்ளது என்ற போதிலும், 2018ஆம் ஆண்டுவரை தொடருமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரைத்துள்ளது" என, அச்சபையின் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்துள்ளார்.

மிஸ்பா உல் ஹக்குக்குத் தற்போது 42 வயதாகின்ற போதிலும், அவரது உடற்றகுதி சிறப்பாக இருப்பதாலும் அவர் மிகவும் அமைதியான முறையில், பதற்றமின்றிப் பணியாற்றுவதன் காரணமாகவும், இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பொட் ஃபிக்சிங் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கடுமையான குழப்பங்களுக்கு மத்தியில் 2010ஆம் ஆண்டு தலைவராகப் பதவியேற்ற மிஸ்பா, அவ்வணியை டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்துக்கும் அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .