2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

20 பேரை ஒப்பந்தம் செய்கிறது சப்பிகுயின்ஸ்

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 04 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில், தமது அணியைச் சேர்ந்த வீரர்கள், பயிற்றுநர்கள் என 19 பேரைப் பலிகொடுத்த சப்பிகுயின்ஸ் கால்பந்தாட்ட அணி, அடுத்த பருவகாலத்துக்காக, 20 பேரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

கோப்பா சூடாமெரிக்கானா தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காகப் பயணித்த வீரர்கள் உட்பட 71 பேர், நவம்பர் மாதம் இடம்பெற்ற விமான விபத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.

அந்த இறுதிப் போட்டியில், சப்பிகுயின்ஸ் அணியை எதிர்த்து விளையாடவிருந்த கொலம்பிய அணியான அத்லெட்டிகோ நேஷியனல் அணி, சம்பியன் கிண்ணத்தை, சப்பிகுயின்ஸ் அணிக்கே வழங்குமாறு கோரியிருந்தது. அதையடுத்து, வெற்றிக் கிண்ணம் சப்பிகுயின்ஸ் அணிக்கும், சிறந்த விளையாட்டுணர்வுக்கான விருது, அத்லெட்டிகோ நேஷியனல் அணிக்கும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, கடனடிப்படையில் வீரர்களை ஒப்பந்தம் செய்வதற்கு, சப்பிகுயின்ஸ் கழகம் முடிவெடுத்துள்ளது.
இந்த விபத்தில், மூன்று வீரர்கள் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில் இருவர், மீண்டும் விளையாடுவார்கள் என எதிர்பார்ப்பதாக, அக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், மேலதிக கோல் காப்பாளரான ஜக்ஸன் ஃபொல்மானின் காலில் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது எதிர்காலம் குறித்து உறுதியாகத் தெரியவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .