2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பங்களாதேஷ்-சிம்பாப்வே டெஸ்ட் போட்டிகள் நவம்பரில்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெறவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, நவம்பர் மாதத்துக்கு முன்னகர்த்த சிம்பாப்வே கிரிக்கெட் இணங்கியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹஸன் தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் டுபாயில் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டத்தின்போது, இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் இந்தத் தொடரின் அட்டவணை தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களால் இம்மாதம் இடம்பெறவிருந்த அவுஸ்திரேலிய அணிக்கெதிரான பங்களாதேஷின் டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, இந்த வருடம் இனி ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியும் பங்களாதேஷில் இடம்பெறாது என ஏங்கியிருந்த ரசிகர்களுக்கு ஆறுதலாய் இச்செய்தி அமையவுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு சர்வதேச இருபது-20 போட்டிகல் கொண்ட தொடரில் முன்னர் விளையாடவிருந்த நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிகள் முன்னகர்த்தப்பட்டதால், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்காக ஜனவரி மாதம் சிம்பாப்வே மீண்டும் பங்களாதேஷுக்கு வரவுள்ளது.

இதேவேளை சியல்கொட், குளுனாவில் இடம்பெறுவதாக இருந்த டெஸ்ட் போட்டிகளை டாக்கா மற்றும் சிட்டகொங்குக்கு மாற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .