2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மைதானத்தில் மோதல்: பேர்முடா வீரருக்கு வாழ்நாள் தடை

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேர்முடாவில் இடம்பெற்ற சம்பியன்களின் சம்பியன் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஏற்பட்ட மோதலில் சம்பந்தப்பட்ட வீரருக்கு, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜேஸன் அன்டர்சன் என்ற வீரருக்கே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிளெவ்லான்ட் பிராந்திய கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடிய அன்டர்சன், வில்லோ கட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் ஜோர்ஜ் ஓ பிரையனுடன் இடம்பெற்ற மோதலுக்குத் தூண்டிய குற்றச்சாட்டிலேயே, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளார். ஓ பிரையனுக்கு 'குறிப்பிட்ட காலத் தடையை விதிக்கும் பொருட்டு, 6 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளில் பங்குபற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது" என அந்நாட்டுக் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

10 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்தே, அவருக்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேர்முடா அணி சார்பாக 14 தடவைகள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள அன்டர்சன், விக்கெட் காப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, துடுப்பாட்ட வீரரான ஓ பிரையனுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் கடுமையான மோதலில் ஈடுபட்டதோடு, அன்டர்சன் மீது ஓ பிரையன் துடுப்பை வீசித் தாக்க முனைந்தார். அதன் பின்னர், இருவரும் கட்டி உருண்டதோடு, ஒரு கட்டத்தில் ஓ பிரையன் மீது அன்டர்சன் இறுக்கி உதைய முனைந்தார். அந்த உதையானது, அச்சண்டையைத் தடுக்க முனைந்த அன்டர்சனின் சக வீரரான ஆரொன் அடம்ஸ் மீதே வீழ்ந்திருந்தது.

போட்டி முடிவின் பின் பெறப்பட்ட காணொளி ஆதாரங்கள், போட்டி மத்தியஸ்தர்களின் அறிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .