Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 31 , பி.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான அன்டி மரே, முதலாமிடத்துக்குப் பொருத்தமானவர் என, தற்போதைய முதல்நிலை வீரரான நொவக் ஜோக்கோவிச் குறிப்பிட்டுள்ளார். எனினும், முதலிடத்தை அவர் கைப்பற்றக்கூடும் என்ற நிலைமை, தன்னை உற்சாகப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக சில தோல்விகளை ஜோக்கோவிச் சந்தித்துவரும் நிலையில், வென்றுவரும் அன்டி மரே, இவ்வாண்டு முடிவில், முதலிடத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள ஜோக்கோவிச், "அன்டி மரே, தான் விளையாடிய மிகச்சிறந்த டென்னிஸை விளையாடி வருகிறார். இவ்வாண்டு இறுதியில், முதலாமிடத்தைப் பெறக்கூடிய நிலைமையில் இருப்பதற்கு, அவர் பொருத்தமானவர். அவ்விடத்தை அவர் அடைவாரா இல்லையா என்பது, அவரில் மாத்திரம் தங்கியிருக்கவில்லை. அது, என்னிலும் தங்கியிருக்கிறது" என்றார்.
இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு புள்ளிக்குமாகவும் போராடக்கூடிய நிலைமையை, இந்த முதலிடத்துக்கான போட்டி ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago