Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 27 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டியில், இந்திய அணியின் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து, அவ்வணிக்குத் தோல்வி கிடைத்த நிலையில், மத்திய வரிசை மீது பொறுமை காட்டப்பட வேண்டுமென, அவ்வணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி தெரிவித்துள்ளார்.
261 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, ஒரு விக்கெட்டை இழந்து 98 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து, 7 விக்கெட்டுகளை இழந்து 167 என்ற நிலையை அடைந்து, பின்னர் தோல்வியடைந்திருந்தது. அதில், மத்திய வரிசை வீரர்கள் சிலர், அடித்தாட முயன்று, தங்களது விக்கெட்டைப் பறிகொடுத்திருந்தனர்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த டோணி, "கிரிக்கெட் மாறிவிட்டது. தங்களது ஆக்ரோஷமான துடுப்பாட்டப் பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டாமென அவர்களிடம் சொல்வது முக்கியமானது. தாங்கள் அடிக்கக்கூடிய இடங்களில் பந்துகள் வீசப்பட்ட போது, அவர்கள் அடித்தாடினர். 5ஆம், 6ஆம் இலக்க வீரர்கள், புதியவர்கள். அவர்கள், இவற்றிலிருந்து கற்றுக் கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.
சற்றுக் கடினமான இந்த ஆடுகளத்தில், ஆரம்பத்தில் இலகுவாகத் துடுப்பெடுத்தாட முயன்றாலும், பந்து பழையதாகிய பின்னர், துடுப்பெடுத்தாடுவது சிரமமாக மாறியது. அதைச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடுவது, இவ்வாறான ஆடுகளங்களில் கடினமானது எனவும் தெரிவித்தார்.
இந்த வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த போட்டியின் நாயகன் மார்ட்டின் கப்டில், இந்த வெற்றியிலிருந்து, போட்டிகளை வெல்வதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago