2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

'வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டனர்'

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 24 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் வெற்றிபெற்றமைக்கு, வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டமையே காரணம் என, விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த டிக்வெல்ல, "எங்களது பந்துவீச்சாளர்கள், அழுத்தத்தைச் சிறப்பாகக் கையாண்டனர். எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள், சிறப்பாகச் செயற்பட்டனர். சுரங்க லக்மால், நுவான் குலசேகர, நுவான் பிரதீப் ஆகியோர், இந்த ஓட்ட எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான பிரதான வீரர்களாவர். எங்களுடைய பந்துவீச்சை வைத்துக் கொண்டு, இந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் மே.தீவுகளை மட்டுப்படுத்த, நாம் நம்பிக்கையுடன் காணப்பட்டோம்" என்றார்.

களத்தடுப்பில் ஓரளவு சுறுசுறுப்பாகச் செயற்பட்ட இலங்கை அணி, அவற்றுக்கு மத்தியில், சில பிடியெடுக்கும் வாய்ப்புகளைத் தவறவிட்டிருந்தது. அந்தத் தவறுகளை விட்டமையை ஏற்றுக் கொண்ட டிக்வெல்ல, அதிர்ஷ்டவசமாகவே, வெற்றிபெறும் அணியாகத் தாங்கள் மாறியதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .