2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

'விபத்தில் தப்பியவர் மீண்டும் விளையாடுவார்'

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் சப்பகுவன்ஸ் றியல் என்ற கழகத்தின் வீரர்களையும் ஊடகவியலாளர்களையும் ஏற்றிக் கொண்டு சென்ற விமானம், கொலம்பியாவில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த 71 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதில் தப்பிய வீரரொருவர், மீண்டும் போட்டிகளில் விளையாடுவார் என, அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிர் தப்பிய 6 பேரில் 3 பேர், கழக வீரர்களாவர். அதில் ஹெலியோ நேட்டோ என்ற வீரர், காலில் காயத்துடன் மீட்கப்பட்டு, சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த அவரது தந்தை, சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் குணமடைந்து வருவதாகவும், அவர் மீண்டும் போட்டிகளில் பங்குபற்றுவார் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .