Shanmugan Murugavel / 2016 நவம்பர் 29 , பி.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் அணிக்கெதிராக நேற்றுப் பெற்றுக் கொள்ளப்பட்ட டெஸ்ட் வெற்றி, வரலாற்றில் மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றிகளுள் ஒன்றாகப் பதியப்படும் என, நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன் தெரிவித்துள்ளார்.
இறுதி நாளில் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, தேநீர்பான இடைவேளை வரை ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து, வெற்றி - தோல்வியற்ற முடிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் 9 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு, நியூசிலாந்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.
வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த கேன் வில்லியம்ஸன், "சப்ராஸின் விக்கெட், முக்கியமான தருணமாக அமைந்தது. ஆனால், நாளின் 3 வேளைகளுக்குள் ஒரு வேளையில் 9 விக்கெட்டுகளை நீங்கள் வீழ்த்தும் போது, அவை எல்லாமே பெரிய தருணங்கள் தான்.
"எல்லாமே விரைவாக நடக்கும். தேநீர் நேரத்தின் போது காணப்பட்ட உணர்வுக்கும் போட்டியின் பின்னர் காணப்படும் உணர்வுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. இது, மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றிகளுள் ஒன்றாக அமையும்" என்று தெரிவித்தார்.
போட்டியின் ஆடுகளம், துடுப்பாட்டத்துச் சாதகமான ஒன்றாகவே காணப்பட்டதாகத் தெரிவித்த வில்லியம்ஸன், பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக இழக்கப்பட்டமைக்கு, விசேடமான காரணங்கள் எவையும் இருந்திருக்கவில்லையெனவும் தாங்கள் பொறுமையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, டெஸ்ட் தரப்படுத்தலில் 7ஆம் இடத்தில் காணப்பட்ட அவ்வணி 6ஆம் இடத்துக்கு முன்னேறியதோடு, 2ஆம் இடத்தில் காணப்பட்ட பாகிஸ்தான் அணி, 4ஆம் இடத்துக்குப் பின்தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago