2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

11ஆம் நாள் போட்டிகள்: பெல்ஜியம் அடுத்த சுற்றில், போர்த்துக்கல் வெளியேறும் அபாயம்

A.P.Mathan   / 2014 ஜூன் 23 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் 11ஆம் நாள் போட்டிகளின் படி முன்னணி அணிகளில் ஒன்றான போர்த்துக்கல் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் அபாய நிலையில் உள்ளது.

நேற்றைய முதல் போட்டி பெல்ஜியம் - ரஷ்சியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெல்ஜியம் அணி 1 இற்கு 0 என என வெற்றி பெற்று, இரண்டாம் சுற்றுக்கு குழு H இல் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது. இறுக்கமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் டிவோக் ஒரிஜி 88ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலம், பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது. பெல்ஜியம் வீரர் ஈடன் ஹசார்ட் போட்டியின் நாயகனாக தெரிவானார்.

இரண்டாவது போட்டி குழு H அணிகளான வட கொரியா - அல்ஜீரியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அல்ஜீரியா அணி 4 இற்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. அல்ஜீரியா அணியின் முதல் கோலை இஸ்லாம் ஸ்லிமானி 26 வது நிமிடத்தில் அடித்தார். இரண்டாவது, மூன்றாவது கோல்கள் 28 மற்றும் 38ஆவது நிமிடங்களில் ரபீக் களிச்சே, அப்துல்மொமீன் ஜபோ ஆகியோர் அடித்தனர். நான்காவது கோலை யசீன் பிரஹமி 62ஆவது நிமிடத்தில் அடித்தார். கொரியா அணி சார்பாக சன் ஹன்குமீன், கூ ஜக்கோல் ஆகியோர் 50 மற்றும் 72ஆம் நிமிடங்களில் கோல்களை அடித்தனர். போட்டியின் நாயகனாக இஸ்லாம் ஸ்லிமானி தெரிவு செய்யப்பட்டார்.

மூன்றாவது போட்டி போர்த்துக்கல் - அமெரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இறுதி நேர கோல் மூலம் போர்த்துக்கல் அணி போட்டியை சமப்படுத்தியது. 5ஆவது நிமிடத்தில் நானி போர்த்துக்கல் அணி சார்பாக முதல் கோலை அடித்தார். ஜெர்மைன் ஜோன்ஸ் 64ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலம் போட்டி சமநிலை அடைந்தது. 81ஆவது நிமிடத்தில் கிளின்ட் டெம்பெசி அடித்த கோல் மூலம் அமெரிக்கா அணி முன்னிலைப் பெற்றது. 91ஆவது நிமிடத்தில் வரெல்லா அடித்த கோல் மூலம் போர்த்துக்கல் அணி போட்டியை சமன் செய்தது. போட்டியின் நாயகனாக அமேரிக்கா கோல் காப்பாளர் ரிம் ஹோவேர்ட் தெரிவானார். உலகின் சிறந்த வீரர் என்ற விருதை வைத்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி முதற்ப் போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த நிலையிலும். இந்தப் போட்டியை சமநிலையில் நிறைவு செய்துள்ள நிலையிலும் அடுத்த சுற்று வாய்ப்புகள் மிக அரிதாகவே உள்ளது.

கானா அணியுடனான போட்டியில் 5 கோல்களுக்கு மேற்பட்ட வித்தியாசத்தில் வென்றால் மாத்திரமே வாய்ப்புக்கள் கிடைக்கும். இதேவேளை அமெரிக்கா அணி அடுத்த போட்டியில் சமநிலை முடிவை பெற்றாலே அடுத்த சுற்றுக்கு தெரிவாகி விடும். இந்தக் குழுவில் இருந்து எந்த அணிகளும் இதுவரை அடுத்த சுற்றுக்கு தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .